நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 391 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த அனர்த்தத்தினால் 5 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் இருவர் வெள்ளத்தில் சிக்கியும் இருவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியும் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்தோடு, ஒருவர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12 வீடுகள் முழுமையாகவும், 635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.