தெற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் 11 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி விரைவிலேயே காற்றழுத்த தாழ்வ மண்டலமாக மாறுவதால் தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடலில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் தென்கிழக்கு வங்கக்கடல் உள்ளிட்ட வங்காள விரிகுடாவில் மணிக்கு 60 கி.மீ வரையில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.