சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும் நாளை(புதன்கிழமை) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலவுகின்ற காலநிலையினை அடிப்படையாகக் கொண்டே விடுமுறையை நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.