நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி உற்சவத்தின் 5ஆம் நாள் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றது. சூரன் போர் உற்சவம் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணி குறிப்பிட்டளவு பக்தர்களையே ஆலயத்தினுள் அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில் நாளைய சூரன் போர் உற்சவத்தை அடுத்து , அதிகாலை 4.30 மணி தொடக்கம் காலை 7.30 மணி வரைக்கும் , பின்னர் மாலை 3 மணி தொடக்கம் அர்த்தசாம பூஜை வரைக்குமே ஆலயத்தினுள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளை மறுதினம் வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது. அதன் போது , காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் , பின்னர் மாலை 5.30 மணி முதல் அர்த்த சாம பூஜை வரையிலுமே ஆலயத்தினுள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆலயத்தினுள் செல்லும் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பேணி , உரிய முறையில் முக கவசங்களை அணிந்து , ஆலயத்தினுள் கூடி நின்று வழிபாடு செய்யாது சமூக இடைவெளிகளை பேணி வழிபபாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை கந்தசஷ்டி காலை மாலை உற்சவங்கள் நல்லூர் ஆலய உத்தியோகபூர்வ யூடியூப் சனலில் நேரடியாக ஒளிபரப்ப படுகிறமை குறிப்பிடத்தக்கது.