இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 96 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், கல்வி, வணிகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நம் மக்கள் பிற நாடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
அவர்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியப் பின் வழங்கப்படும் சான்றிதழை ஏற்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து நாம் வழங்கம் தேசிய அளவிலான தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 96 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அவுஸ்ரேலியா, பெல்ஜியம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், கஜகஸ்தான், ரஷ்யா, இலங்கை, மாலைத்தீவு, பிரேசில், ஆர்ஜன்டீனா, நேபாளம், குவைத், கொலம்பியா, ஈரான், கட்டார், பாலஸ்தீனம், உள்ளிட்ட 96 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.