தலிபான்கள் உலகளவிலான அங்கீகாரத்தைக் கோரும் முன்பு, ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் தேசிய பாதுகாப்பு மாநாடு இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இதற்கு முன்பாக உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசர்களுடன் அஜித் தோவல் பேச்சவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த மாநாட்டிற்கு இடையில் அவர் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தையை தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது எல்லை மேலாண்மை, எல்லைக் கட்டுமானப் பணிகள், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.