பிரிட்டிஷ்-ஈரானிய கைதியான நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப்பின் கணவர் 21 நாட்களுக்குப் பின்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துள்ளார்.
தனது மனைவியை ஈரானில் இருந்து விடுவிக்க அரசாங்கம் மேலும் பலவற்றை செய்யக் கோரி, வெளிவிவகார அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் போராட்டத்தை முடிவுறுத்திக்கொண்டுள்ள அவர் முழு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மேலும் ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜகாரி-ராட்க்ளிஃப் ஈரானில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஐந்து ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் அவர் செய்திருந்த மேன்முறையீடும் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.