சைடஸ் கடிலா நிறுவனத்தின் சைசோவ்-டி தடுப்பு மருந்தை பெரியவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா சைகோவ்-டி தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்துவதில் அரசு அவசரம் காட்டாது எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த சைடஸ் கடிலா நிறுவனம் சைகோவ்-டி என்ற ஊசியில்லா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. பார்மாஜெட் என்ற கருவி மூலமாக இந்த மருந்து செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டோஸ் செலுத்திக் கொண்ட பின் 28 நாட்கள் இடைவெளியில் மேலும் இரண்டு டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.