மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (திங்கட்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவித்தல் படி குறித்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மேலும் நகர்ந்து எதிர்வரும் 17 ஆம் திகதி மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 18 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.