சீன உரத்தினை மூன்றாம் தரப்பின் ஊடாக பரிசோதனைக்குட்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், குறித்த நிறுவனம் மீள பரிசோதனைகளை முன்னெடுத்தாலும் தாவர தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைவாக நிராகரிக்கப்பட்ட குறித்த உரத் தொகையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
அபாயம் மிக்க நுண்ணுயிர்கள் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்ட சீன உரத்தை மூன்றாம் தரப்பொன்றின் ஊடாக மீண்டும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தவுள்ளதாக சீனத் தூதுவரை மேற்கோள்காட்டி பத்திரிகையில் செய்தி வெளியாகின.
குறித்த செய்தி தொடர்பாக விளக்கமளித்து விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.