நாட்டில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 5 இலட்சத்து 51 ஆயிரத்து 540 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,929 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 13 ஆயிரத்து 995 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.