சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டிற்கான எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான நிதியுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கை பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.
மேலும் இலங்கைக்கு மாதாந்தம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 350 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சமடையதேவையில்லை என்றும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.