நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம் நாளை முதல் வழமை க்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது மேல் மாகாணத்தில் சமையல் எரிவாயுவின் விநியோகம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என்றும் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ மேலும் தெரிவித்தார்.
உற்பத்தி நடவடிக்கைகள் 4 நாட்கள் தடைப்பட்டதன் காரணமாகவே சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.