இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள திடீர் சோதனைச் சாவடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது பல பாதுகாப்பு நிலையங்களில் சோதனை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏன் திடீரென பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என அவர் குறப்பிட்டுள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சிகளால் இன்று நடத்தப்படவிருந்த போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியே பலத்த பாதுகாப்புப் பிரசன்னம் என சந்தேகிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.