• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

Anoj by Anoj
2021/11/16
in அமொிக்கா, உலகம்
74 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டர், தண்டனை விதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் விடுதலை செய்யப்பட்டார்.

ஃபிராண்டியர் மியன்மார் ஆன்லைன் தளத்தின் நிர்வாக ஆசிரியராக இருந்த 37வயதான ஃபென்ஸ்டர், மே மாதம் யாங்கூன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

பெப்ரவரியில் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள டஸன் கணக்கான உள்ளூர் ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.

ஃபிரான்டியரின் கூற்றுப்படி, ஃபென்ஸ்டர் இதற்கு முன்னர் மியன்மார் நவ் என்ற ஒரு சுயாதீன செய்தித் தளத்தில் பணியாற்றினார். இது ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் இராணுவத்தை விமர்சித்துள்ளது.

மியன்மார் நவ் என்ற தடைசெய்யப்பட்ட ஊடகத்தில் அவர் பணியாற்றுகிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமைந்தன. டேனி 2020ஆம் ஆண்டு ஜூலையில் மியன்மார் நவ்வில் இருந்து இராஜினாமா செய்து அடுத்த மாதமே ஃபிரான்டியரில் சேர்ந்தார்.

ஃபென்ஸ்டர், குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும், சட்ட விரோதமான தொடர்பு மற்றும் இராணுவத்திற்கு எதிரான எதிர்ப்பை ஊக்குவித்ததற்காகவும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.

அத்துடன் அவர் மீது தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதம் ஆகிய இரண்டு கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கான தண்டனை அறிவிக்கப்படாத நிலையில், கடந்த 12ஆம் திகதி அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மியன்மாரில் இருக்கும் முன்னாள் அமெரிக்க தூதர் பில் ரிச்சர்ட்சன், ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டரை விடுவிப்பது குறித்து இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இதில் டேனி ஃபென்ஸ்டரை விடுதலை செய்ய மியன்மார் இராணுவ அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இதன்படி சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு டேனி ஃபென்ஸ்டர், நேற்று (திங்கட்கிழமை) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும், ஃபென்ஸ்டர், அமெரிக்கா செல்வதற்கும் மியன்மார் இராணுவ அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் அங்கு ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டு ஊடகத்தினர் மீது வன்முறை கட்டவிழத்துவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டர்இராணுவ சதிப்புரட்சிஇராஜினாமாசிறைத் தண்டனைதண்டனைவிடுதலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Next Post

யாழில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உண்டு – மாவட்டச் செயலாளர்

Related Posts

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

2026-06-16
வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!
இங்கிலாந்து

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

2026-06-16
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

2026-06-16
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!
உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

2026-06-16
Next Post
யாழில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உண்டு – மாவட்டச் செயலாளர்

யாழில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உண்டு - மாவட்டச் செயலாளர்

நிட்டோ ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : மெட்வெடேவ் – ஸ்வெரேவ் பலப்பரீட்சை

நிட்டோ ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : மெட்வெடேவ் - ஸ்வெரேவ் பலப்பரீட்சை

எதிர்க்கட்சியின் பேரணியில் கலந்துகொள்ள செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சியின் பேரணியில் கலந்துகொள்ள செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.