வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், சீனாவுடனான எல்லைக்கு அருகே முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு பெரிய வளர்ச்சித் திட்டத்தை ஆய்வு செய்ததாக வடக்கின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு மாத கால இடைவெளிக்கு வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், பொது பார்வையில் தோன்றினார்.
இது சர்வதேச தனிமை மற்றும் அழுத்தத்தை எதிர்கொண்டு செழிப்பை அடைய தனது நாட்டின் இரும்பு விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது கிம் கூறினார். மேலும், கட்டுமான முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்ததாகவும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் கிம்மின் குடும்பத்தினரால் போற்றப்படும் புனித மலையையும் பார்வையிட்டதாக, அரச ஊடகம் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. கிம்மின் குடும்பத்தினால் போற்றப்படும் புனித மலையான மவுண்ட் பெக்டுவுக்கு அருகில் இந்த நகரம் உள்ளது.
மேலும், இது நாட்டின் புரட்சியின் ஆன்மீக மையமாக அதிகாரப்பூர்வ கதைகளால் விபரிக்கப்படுகிறது.
வடகொரியாவின் வடக்கு அல்பைன் நகரமான சாம்ஜியோன், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், ஸ்கை ரிசார்ட் மற்றும் வணிக, கலாச்சார மற்றும் மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இது ‘சோசலிச உட்டோபியா’ என்று அழைக்கப்படும் ஒரு பெரிய பொருளாதார நகரமாக மாற்றப்படுகிறது.
சர்வதேச தடைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட தாமதங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படவுள்ள மூன்றாவது மற்றும் கடைசி கட்ட கட்டுமானத்தை ஆய்வு செய்வதற்காக கிம் இங்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.