எதிர்காலத்தில் பைஸர் தடுப்பூசிகளை மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
முதலாவது மற்றும் 2ஆவது டோஸ்களை வழங்குவதற்கு போதுமான ஏனைய தடுப்பூசிகள் நாட்டில் இருப்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதற்கமைவாக 14.5 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் தேவையான தடுப்பூசிகளை வாராந்த அடிப்படையில் விநியோகிக்க உற்பத்தியாளர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம், தற்போது பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதும் பூஸ்டர் டோஸை வழங்குவதுமே சுகாதார அதிகாரிகளின் பிரதான இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.