பிரித்தானியாவில் எரிபொருள் மற்றும் எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால் ஏறக்குறைய 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு ஒக்டோபரில் 4.2% உயர்ந்துள்ளது.
பணவீக்கத்தின் நுகர்வோர் விலைக் குறியீடு தற்போது இங்கிலாந்து வங்கியின் இலக்கை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து செலவுகள், எரிவாயு, மின்சார கட்டணம் மற்றும் பயன்படுத்திய கார்கள் அனைத்தின் விலைகளும் உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை அடுத்து அமுல்படுத்தப்பட்ட முடக்க கட்டுப்பாடுகளுக்கு பின்னர் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு திரும்பிய நிலையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
இந்த சிக்கலைச் சமாளிக்க எதிர்வரும் மாதங்களில் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் என இங்கிலாந்து வங்கி கூறியுள்ளது.