பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் சரி செய்யப்பட வேண்டும் என, புர்கினா பாசோ ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோரே தெரிவித்துள்ளார்.
வடக்கில் இனாட்டாவில் இராணுவ பொலிஸ் பிரிவை இலக்கு வைத்து ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 49 வீரர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புர்கினா பாசோ, ஜிஹாதி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தொடங்கியதில் இருந்து பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் மீதான மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றான அதிக இறப்பு எண்ணிக்கைக்கு மத்தியில் பொதுமக்களின் கோபத்தைத் தொடர்ந்து இந்த கருத்தினை ஜனாதிபதி வெளியிட்டார்.
பல நகரங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் செவ்வாயன்று அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை குறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்திய பின்னர் இரண்டு தளபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்ப்பாளர்கள், பாதுகாப்பின்மையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக ஜனாதிபதி கபோரே பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
ஆனால், நாட்டைப் பாதுகாக்க பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நிற்குமாறு ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்திய தாக்குதல்களை அடுத்து புர்கினா பாசோவில் செவ்வாய் முதல் வியாழன் வரை தேசிய துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.