மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் மனித பாவனைக்குதவாத உணவு பொருட்களை விற்பனை செய்த 4 வர்த்தக நிலையங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் அவ்வர்த்தக நிலையங்களிலிருந்து மனித பாவனக்கு உதவாத 100 கிலோ உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரி, தாதிய பயிற்சி கல்லூரி மாணவர்களுடன் இணைந்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தேடுதல் நடவடிக்கையில் நேற்று(வியாழக்கிழமை) ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பொதுச் சந்தை உட்பட நகரிலுள்ள பேக்கரிகள், சில்லறைகடைகள், ஹோட்டல்கள், மரக்கறி கடைகள் உட்பட 16 கடைகளில் தேடுதல் நடாத்தியபோது 4 வர்த்தகர்கள் சிக்கியதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.