மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் ஐந்தாவது அலை கொவிட் தொற்றுப் பரவல் உருவாகலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில், அங்கு தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசியப் பொதுமுடக்கம், திங்கட்கிழமை முதல் எதிர்வரும் பத்து நாட்களுக்கு தொடரும் என பிரதமர் அலெக்ஸாண்டர் ஷாலென்பர்க் அறிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பொதுமுடக்கத்தின்போது, பெரும்பாலான வர்த்தக மையங்கள் மூடப்பட்டிருக்கும். மேலும், கலாசார நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்படும்.
பொதுமுடக்கத்தின்போது அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்று முதலில் கூறப்பட்டாலும், மழலையர் பாடசாலைகள் இயங்கலாம் என்று அதிகாரிகள் தற்போது அறிவித்துள்ளனர்.
இதுதவிர எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆஸ்திரியாவில் தகுதியுடைய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.