நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0 என்ற கணக்கில், இந்தியா அணி கைப்பற்றியுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) ராஞ்சியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் பிலிப்ஸ் 34 ஓட்டங்களையும், மார்டின் கப்டில் மற்றும் மேரில் மிட்செல் ஆகியோர் தலா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார், தீபக் சஹார், அக்ஸர் பட்டேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 17.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இந்தியா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 65 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்சல் பட்டேல் தெரிவுசெய்யப்பட்டார்.