அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, வங்கிகளுக்கான திட்டமிடப்பட்ட பண இருப்புத் தேவையை ஒரு சதவீதத்தினால் பாகிஸ்தான் மத்திய வங்கி உயர்த்தியுள்ளது. இது 13 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
பாகிஸ்தான் மத்திய வங்கியானது இரண்டு வாரங்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளால் பராமரிக்கப்படும் சராசரி பண இருப்புத் தேவையை 5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், குறைந்தபட்ச இருப்புத்தேவையை ஒவ்வொரு நாளும் 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும் வைத்திருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட சராசரி இருப்தேவையான 6 சதவீதமானது உடனடியாக அமுலாக்கப்பட்டுள்ள அதேசமயம் திருத்தப்பட்ட தினசரி குறைந்தபட்ச இருப்புத் தேவையான 4 சதவீதமும் சொற்ப நாட்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வங்கி அமைப்பில் அதிகப்படியான பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த 13 ஆண்டுகளில் முதல் முறையாக வங்கிகளுக்கான ரொக்க இருப்பு வீகிதத்தினை மத்தியவங்கி உயர்த்தியது. இது பணவீக்கத்திற்கு பங்களிப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் 9 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒக்டோபரில் 9.2 சதவீதமாக அதிகரித்தது, ஏனெனில் பாக்கிஸ்தானியர்கள் எரிசக்தி மற்றும் உணவுக்காக அதிக பணம் செலுத்தினர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், 2021-2022 நிதியாண்டில் பணவீக்கம் நெருக்கடியான முறையில் உயர்ந்திருக்கும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டின் கடுமையான கொரோனா நெருக்கடிகள் காரணமாக கீழ் நிலையில் இருந்த பொருளாதாரம் சுறுசுறுப்பாக மீண்டு வருவதால், பணத்திரட்டுகளின் வளர்ச்சி உட்பட கொள்கை அமைப்புகளை படிப்படியாக சீராக்க வேண்டிய அவசியம் உள்ளது’ என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அண்மைய மாதங்களில், பண வழங்கல் வளர்ச்சி மாற்றம் கண்டுள்ளது. இதனால் பண விநியோக வளர்ச்சியானது உள்நாட்டு தேவையை குறைக்கும்.
அதன் மூலம் தற்போதைய பொருளாதார மீட்சியை தக்கவைக்கவும், அரசாங்கத்தின் நடுத்தர கால பணவீக்க இலக்கை அடையவும், ரூபா மீதான அழுத்தத்தை குறைக்கவும் உதவும் என்றும் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
மேலும், டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியானது 176 ஆக உள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் பணம் செலுத்துவதற்கு டொலர்களின் தேவை அதிகரித்து.
இதனால் ரூபாவின் மதிப்பு நெருக்கடியில் உள்ளது. தவிரவும் 6 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள கடன்களை மீளச் செலுத்துவது தொடர்பில் கவலைகள் உள்ளன.