தெஹ்ரீக் இ-லப்பைக் அமைப்பின் தடையை நீக்குவதாக பிரதமர் இம்ரான் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது தாங்களை பலிகடா ஆக்கும் ஒரு செயற்பாடு என்றும், கடமையின் போது செய்த தனிப்பட்ட தியாகங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான தெஹ்ரீக் இ-லப்பைக் மீதான தடையை நீக்கியதாக பாகிஸ்தான் அண்மையில் அறிவித்தது. இந்த முடிவு சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஹ்ரீக் இ-லப்பைக் அமைப்பானது, அண்மையில் பஞ்சாப் மாகாணத்தில் போராட்டங்களை நடத்தியது. போராட்டத்தின் போது ஹ்ரீக் இ-லப்பைக் உறுப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதை அடுத்து வன்முறைகள் வெடித்தன.
இதன் விளைவாக ஆறு பொலிஸார் கொல்லப்பட்டதோடு 520 பேர் காயமடைந்தனர் என பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஏப்ரல் மாதம், ஹ்ரீக் இ-லப்பைக் அமைப்பு போராட்டத்தினை முன்னெடுத்தமையால் நான்கு அதிகாரிகள் உயிரிழந்ததோடு 741 பேர் காயமடைந்தனர்.
குறித்த அமைப்பானது போராட்டங்களின் போது தமது தலைவர் சாத் ரிஷ்வியை விடுவிக்குமாறு கட்சியில் இருந்து தடைசெய்யப்பட்ட அந்தஸ்தை நீக்கவும், பிரான்ஸ் தூதரை நீக்கவும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.