பீடைகொல்லி பதிவாளர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் ஜயசூரிய உடுகும்புரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 வருடங்களாக தடை செய்யப்பட்டிருந்த 5 பீடைக்கொல்லி வகைகளுக்கான தடையை நீக்கியமை தொடர்பில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய பீடைகொல்லி பதிவாளரினால் 2021.11.01 வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செயலிழக்க செய்வதுடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.