நாட்டில் கடந்த வருடத்தில் பதிவுத் திருமணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 378 பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும், கடந்த வருடத்தில் இத்தொகை 1 இலட்சத்து 43 ஆயிரத்து 61 ஆகக் குறைவடைந்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான திருமணப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.