க்ளைபோசேட் (Glyphosate) உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
க்ளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை தடை செய்யும் வர்த்தமானியை இரத்து செய்யும் வகையில் நேற்று இரவு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பீடைக்கொல்லி பதிவாளர் பதவியிலிருந்து கலாநிதி ஜே.ஏ.சுமித் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.