வடக்கு அயர்லாந்தில் கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான வழிகளைக் கருத்தில் கொள்ள நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸின் பரவல் குறையாவிட்டால், கிறிஸ்மஸில் விருந்தோம்பல் வணிகங்கள் மூடப்பட வேண்டியிருக்கும் என்று சுகாதார அமைச்சர் எச்சரித்ததை அடுத்து இது வந்துள்ளது.
வீட்டிலிருந்து பணிபுரிவது தொடர்பான செய்திகள் மற்றும் தற்போதைய விதிகளை மீறுபவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அமைச்சர்கள் இன்னும் உடன்படவில்லை.
இதே பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக நிர்வாகக் குழு திங்கள்கிழமை கூடியது.
கொவிட்-19 நோய்த்தொற்றைக் கையாள்வதில் முகக்கவசங்கள் அணிதல், கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக விலகல் போன்ற அடிப்படைகளை பொதுமக்களுக்கு எவ்வாறு நினைவூட்டுவது என்பதையும் இது கவனித்து வருகிறது.
திங்கட்கிழமை கூட்டத்தின் போது, சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான், அமைச்சர்களிடம் பரிசீலனைக்காக ஒரு கடிதத்தை வழங்கினார்.