ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி குறித்த வழக்கை மீள அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை தமிழில் வாசிக்குமாறு கோரியதையடுத்து, குற்றச்சாட்டை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான கோரிக்கையையும் கால அவகாசத்தையும் கருத்தில் கொண்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 10 பேர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், தமிழில் சரளமாகத் தெரிந்த சட்டத்தரணிகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு நீதிமன்றம் நினைவூட்டல் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும்அழைத்துசெல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.