நீட் தேர்வு தொடர்பான சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரியுள்ளார்.
சென்னை- கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தபோதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கோரியுள்ளார்.
இந்த நீட் தேர்வு, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பதை ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு தனது பரிந்துரைகளை தமிழக அரசிற்கு வழங்கியது.
அதனடிப்படையில் கடந்த செப்டெம்பரில் தமிழக சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு’ நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.