தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள ‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஆகவேதான் மரபணுப் பரிசோதனைகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் இதுவரை டெல்டா வைரஸ் திரிபு மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.