ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையைத் தயாரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்த ஏவுகணை மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் 6 ஆயிரத்து 670 மைல் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும் என ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.
தலைநகர் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள ரியூடோவோ என்ற இடத்தில் இரகசிய ஆலையில் குறித்த ஏவுகணையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையை எதிர்வரும் ஆண்டில் தயாராக வைத்திருக்க ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யா, கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்த ஏவுகணையை சோதனை செய்தமை குறிப்பிடத்தக்கது.