களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலைத் தீப்பரபல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவு கூறியுள்ளது.
இதேவேளை தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதுடன், மின் ஒழுக்கின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.