தங்கள் மற்றும் அதன் அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டுமென தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடை நியாயமற்றது. பாகுபாடானது. இதனால் பெரும் அதிருப்தியடைந்துள்ளோம்.
பயணத் தடை அறிவியல் ரீதியிலானதல்ல. இந்த தடையினால் தென்னாபிரிக்காவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை கொரோனா திரிபு அடைவதை நிறுத்த முடியாது. பயணத் தடையினால் பயன் இல்லை’ என கூறியுள்ளார்.
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்டவை பயணத் தடை விதித்திருக்கும் நாடுகளில் அடங்கும்.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் அதிகம் வீரியம் கொண்ட ஓமிக்ரோன் மாறுபாடு, மாத ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.