ஒமைக்ரான் கொரோனா தொற்று குறித்த அச்சம் நிலவி வருகின்ற நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு இன்று (திங்கட்கிழமை) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தென் ஆப்பிரிகாவில் கண்டறியப்பட்டுள்ள குறித்த வைரஸ் தொற்று போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹொங்கொங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பரவிவருகின்றது.
இந்நிலையில், இந்தியாவிலும் இதன் தாக்கம் கண்டறியப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும், பரிசோதனையை அதிகரிக்கவும், விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.