சமையல் எரிவாயுவின் விலை உயர்வே தற்போது வெடிப்பு சம்பவம் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சமீபத்தில் சமையல் எரிவாயு வெடிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் முறையான விசாரணைகள் நடைபெறுவதை உறுதி செய்வது தமது கடமை என்றும் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 233 சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தனியார் நிறுவனத்தை மேற்கோளிட்டு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 6 ஆண்டுகளில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பதை கூறி இதனை நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், சமீபத்தில் வழக்கத்திற்கு மாறாக இடம்பெற்ற வெடிப்பு சம்பங்களை ஒப்புக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
மேலும் இந்த சமபாவங்கள் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஆராய்ந்து வருவதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.