சீனச் சிறையில் இருந்து தைரியமாக தப்பிச் சென்ற வடகொரி நாட்டவர் 40 நாட்களின் பின்னர் மீண்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனப் பெயரான Zhu Xianjian என்று அழைக்கப்படும் 39 வயதான நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டார் என சீன பொலிஸார் கூறியுள்ளனர்.
2013ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து சீனாவுக்கு தப்பிச் சென்ற அவருக்கு ஜுவுக்கு ஜிலின் நகரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஒக்டோபர் 19 அன்று இரவு சிறைக் கொட்டகையில் ஏறி தப்பி சென்றிருந்த நிலையில் அவரைப் பிடிப்பதற்கு தகவல் வழங்கினால் 700,000 யுவான் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வட கொரியாவிலிருந்து தப்பிய பின்னர் சீனாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தது, கொள்ளை குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் ஆரம்பத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.