இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் திங்கட்கிழமை (22) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
34 பேருடன் பயணித்த குறித்த பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஒரு கொன்கிறீட் தடுப்பு சுவருடன் மோதி, பின்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தேடல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் புடியோனோ கூறியுள்ளார்.
தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உள்ள கிராப்யாக் சுங்கச்சாவடியின் வளைந்த வெளியேறும் பாதையில் நுழையும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்றும் அவர் கூறினார்.
விபத்து நடந்த சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஆறு பயணிகளின் உடல்களை மீட்டனர்.
மேலும் 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது வழியிலும், சிசிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்தனர்.
சிகிக்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 18 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் புடியோனோ கூறினார்.
















