ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், புதிய வழிக்காட்டு நெறிமுறைகளையும் விதித்துள்ளது.
குறித்த வழிக்காட்டு நெறிமுறைகள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் 7 நாட்கள் விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும் மீண்டும் ஏழு நாட்கள் கட்டாயம் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆறு பேருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேற்படி அறிவுறுத்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.