ஐ.நா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம், பன்முகத் தன்மைக்கான சீர்த்திருத்தம் ஆகியவற்றுக்கான கோரிக்கை முன்பைவிட இப்போது வலுவாக உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நிவ்யோர்க்கில் நடைபெறும் ஜி 77 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சார்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிலையான இடம் வழங்க வேண்டியதன் தேவையை எடுத்துக்கூறியுள்ளார்.
வளரும் நாடுகளில் பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நீடித்த வளர்ச்சிக்கு வளர்ந்த நாடுகள் பங்காற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.