அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைத் தடுக்க அனைத்து முடக்கம் மற்றும் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையை சிம்பாப்வே மீண்டும் விதித்துள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொற்று பரவலை அடுத்து நாட்டில் 130,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளும் சுமார் 4,700 இறப்புகளும் அங்கு பதிவாகியுள்ளன.
பண்டிகைக் காலம் நெருங்குவதால் நிலைமை மோசமாகும் என்ற அச்சம் காணப்படும் அதேவேளை நான்காவது அலை ஏற்பட கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் இரவு 09 மணி முதல் 06:00 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா அமுல்படுத்தினார்.