இலங்கை கிரிக்கட் அணி வீரர் அஞ்சலோ மத்தியூஸ் எல்.பி.எல் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக காலியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே மத்தியூஸிற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக உபாதையிலிருந்து அஞ்சலோ மத்தியூஸ் குணமடைய 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தேவைப்பட்டால் மாத்திரமே அஞ்சலோ மத்தியூஸ் துடுப்பெடுத்தாடுவார் என குறிப்பிடப்படுகின்றது.
நடைபெறவுள்ள எல்.பி.எல் தொடருக்கான கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.