தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவல் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட அவர், பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுவதாகவும், தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் 477 விமானப் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவித்த அவர், அவர்களில் ஒருவருக்கும் ஒமிக்ரோ தொற்று இனங்காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று திரிபு இனங்காணப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.