கொங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி, அரசுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்துள்ளார்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவின் நெருங்கிய கூட்டாளியான ஆல்பர்ட் யூமா, பல மில்லியன் டொலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
சுரங்கத் துறையைச் சுத்தப்படுத்துவது ஒரு முக்கிய பணி என்பதனால் சர்வதேச அழுத்தத்தின் மத்தியில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய கோபால்ட் சப்ளையர் என்ற வகையில், மின்சார வாகனங்களுக்கு உலகளாவில் இருந்து பெருமளவில் இலாபத்தை கொங்கோ ஈட்டுகிறது.
இதேவேளை சுரங்கத் துறை ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களால் சிக்கியுள்ளது என பல மனித உரிமை குழுக்கள் நீண்ட காலமாக குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.