• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
குர்ஆன் வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டியை கிழித்ததால் இலங்கையர் கொலை செய்யப்பட்டாரா? – மதவாத அமைப்புக்கு தொடர்பு?

Dhackshala by Dhackshala
2021/12/07
in ஆசிரியர் தெரிவு, இலங்கை
96 1
A A
0
51
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்டதை, ‘தெஹ்ரிக் லெப்பெய்க் பாகிஸ்தான்’ அமைப்பு (TLP) மீதான தடையை நீக்குவதற்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவோடு தொடர்புபடுத்தக்கூடாது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த குமார என்பவர் ஒரு கும்பலால் அடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குர்ஹான் வசனங்கள் பொறிக்கப்பட்ட கடும்போக்கு இஸ்லாமியக் கட்சியான ‘தெஹ்ரிக் லெப்பெய்க்’ பாகிஸ்தானின் (TLP) போஸ்டரை பிரியந்த குமார கிழித்து குப்பைத் தொட்டியில் வீசியதாலேயே அவர் இவ்வாறு கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பெஷாவரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக்கிடம், ஊடகவியலாளரொருவர் பாகிஸ்தான் அரசாங்கம் குறித்த (TLP) அமைப்பு மீதான தடையை நீக்கிய பின்னர் சியல்கோட் கொலை நடந்ததாகவும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அத்தகைய குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் ‘பயனுள்ள அடக்குமுறையை’ பரிசீலிக்கிறதா என  கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், இரண்டு பிரச்சினைகளையும் இணைக்கக் கூடாது என தெரிவித்தார்.

‘தெஹ்ரிக் லெப்பெய்க்’ பாகிஸ்தான் என்ற குழு சமூக ஊடகங்களில் பயனர்களால் கொடூரமான சம்பவத்துடன் இணைக்கப்பட்டபோதும் அந்தக் குழு கொலையில் இருந்து விலகி அதைக் கண்டித்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் உங்களுக்கும் தெரியும் என்றும் குழந்தைகள் வளரும்போது ​​அவர்கள் உணர்ச்சிவசப்படும்போது ​கொலைகள் கூட நடக்கின்றன என தெரிவித்தார்.

மேலும் ‘இது அந்த செயலின் விளைவு’ என்று அர்த்தமல்ல என்றும் பிரியந்த குமார இஸ்லாத்தை மதிக்கவில்லை என்று இளைஞர்கள் குற்றம் சாட்டியமை  திடீர் படுகொலைக்கு வழிவகுத்தது எனவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சரின் இந்தக் கருத்து சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, நீதியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் தற்போதைய இம்ரான் கான் அரசாங்கம்  ‘தெஹ்ரிக் லெப்பெய்க்’ போன்ற கடும்போக்கு மதவாத அமைப்புக்கள் மீதான தடைகளை பொலிஸாரின் எதிர்ப்பையும் மீறி நீக்கியிருந்தது.

இந்த நிலையில், குரான் வசனங்கள் பொறிக்கப்பட்ட குறித்த அமைப்பின் போஸ்டரை பிரியந்த குமார கிழித்து குப்பைத் தொட்டியில் வீசியதாலேயே அவர் இவ்வாறு கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறிருப்பினும் இந்தக் கொலைக்கும் குறித்த அமைப்பிற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த குமார என்பவர் ஒரு கும்பலால் அடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இலங்கை அரச தலைவர்கள் உட்பட பலர் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் உட்பட இதுவரை 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: TLPதெஹ்ரிக் லெப்பெய்க்’ பாகிஸ்தான்பர்வேஸ் கட்டாக்பிரியந்த குமார
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிழக்கு மாகாண புதிய  பிரதம செயலாளர் கடமைகளை  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்!

Next Post

கிளிநொச்சியிலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு

Related Posts

எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!
இலங்கை

2026-03-19
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!
அம்பாறை

கிளிநொச்சியில் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!

பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ , அமைப்புகளோ நேரடியா சென்று நூல் வழங்க முடியாது – வட மாகாண ஆளுநர் திட்டவட்டம்!

604 லீட்டர் பெற்றோலுடன் வர்த்தகர் க‍ைது!
இலங்கை

604 லீட்டர் பெற்றோலுடன் வர்த்தகர் க‍ைது!

2026-03-19
Next Post
கிளிநொச்சியிலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு

கிளிநொச்சியிலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு

புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பாக ரணில் அதிருப்தி

பசிலின் திடீர் இந்திய விஜயம் - சபையில் கேள்வியெழுப்பிய ரணில்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

0
எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

0
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

0
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

0
பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!

பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!

0
தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

2026-03-19
எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

2026-03-19
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

2026-03-19
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

2026-03-19
பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!

பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!

2026-03-19

Recent News

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

2026-03-19
எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

2026-03-19
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

2026-03-19
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.