பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்படட பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை இணை செய்தி தொடர்பாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக ரமேஷ் பத்திரன இன்று தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஊடாக பணம் செலுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த குமார என்பவர் ஒரு கும்பலால் அடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
குரான் வசனங்கள் பொறிக்கப்பட்ட கடும்போக்கு இஸ்லாமியக் கட்சியான தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தானின் (TLP) போஸ்டரை குமார கிழித்து குப்பைத் தொட்டியில் வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.