கந்தஹாரின் தென் மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தங்களது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இஸ்லாமிய எமிரேட் படைகளின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்ளும் சில ஆயுதம் ஏந்திய நபர்கள், தங்களுக்கு இடையூறு விளைவிப்பதாகக் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஆகவே, சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை இனங்காணுமாறு, அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“நாங்கள் அவர்களின் நல்ல செயல்களைப் பாராட்டுகிறோம். அதேநேரம் மோசமான செயல்களை விமர்சிக்கிறோம். அமைதியான முறையில் விமர்சனம் செய்யும் உரிமை மக்களாகிய எங்களுக்கு உள்ளது.
பொதுமக்களை ஒடுக்கும் இஸ்லாமிய எமிரேட் படைகளில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் படைகளில் கடுமையான சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் ”என சைமத் அஹ்மத் ஜாஹித் என்பவர் கூறியுள்ளார்.
இதேவேளை இஸ்லாமிய எமிரேட் படைகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று முகமது அமீன் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஆணையத்தின் தலைவர் முஃப்தி லத்திஃபுல்லா ஹக்கிமி கூறியுள்ளதாவது, “இஸ்லாமிய எமிரேட்டின் சீர்திருத்த ஆணையகம், தப்பியோடியதற்காக நீதிமன்றங்களை நடத்துபவர்கள் மற்றும் மக்களை ஒடுக்குபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியது.
மக்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களைத் தடுக்கவே சீர்திருத்த ஆணையகம் உருவாக்கப்பட்டது.
இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கையை மீறும் மற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இஸ்லாமிய எமிரேட் படைகளை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் எங்களுக்கு தலைமையால் வழங்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
ஆணைக்குழுவின் கருத்துப்படி, இஸ்லாமிய எமிரேட் படைகளின் 650 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், பல்வேறு குற்றங்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.