சீனாவின் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை, தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக, விளையாட்டுப் போட்டிகளுக்கு உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆனால், அமெரிக்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அரசாங்கத்தின் முழு ஆதரவும் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
புறக்கணிப்பு ஏற்பட்டால் உறுதியான எதிர் நடவடிக்கைகளை எடுப்பதாக சீனா முன்பு கூறியிருந்த நிலையில், அமெரிக்கா இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த மாதம் இந்த நிகழ்வை இராஜதந்திர ரீதியாக புறக்கணிப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.