பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது.
கடந்த நான்காம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களை மாத்திரமே இழந்து 300 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
அவ்வணி சார்பாக பாபர் அசாம் 76 ஓட்டங்களையும் அசார் அலி 56 ஓட்டங்களையும் மொஹமட் ரிஸ்வான் 53 ஓட்டங்களையும் பவாத் அலம் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 87 ஓட்டங்களுடன் சுருண்டது. அவ்வணி சார்பாக ஷகிப் அல் ஹசன் மட்டும் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சஜித் கான் விக்கெட்களை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து போலோவ் ஒன் முறைப்படி பங்களாதேஷ் அணி மீண்டும் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி இன்று 5 ஆம் நாள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்று பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்தது.
அவ்வணி சார்பாக ஷகிப் அல் ஹசன் 63 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் 48 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சஜித் கான் 4 விக்கெட்களையும் ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.