லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் 6 ஆவது போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிலிப் சோல்ட் அதிரடியாக விளையாடி 62 ஓட்டங்களையும் நஜிபுல்லா சத்ரன் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி சார்பாக துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும் கீமோ பௌல், அகில தனஞ்சய, செக்குகே பிரசன்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.